விடுதலைப் புலிகளுடனான சண்டையால்தான் இலங்கைக்கு இந்நிலையா...?

Lanka4
2 years ago
விடுதலைப் புலிகளுடனான சண்டையால்தான் இலங்கைக்கு இந்நிலையா...?

2009 போர் முடிப்பதற்காக உலக நாடுகளிடம் வாங்கப்பட்ட கடனால்தான் இலங்கை நாடு இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. 

ராஜபக்சே குடும்பமோ அல்லது பரம்பரையோ இலங்கை நாட்டின் சொத்திலோ நாட்டின் இலாபத்திலோ ஒரு சதம்கூட எடுக்கவில்லை.  காரணம் நாடு ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்திலிருந்து சந்திரிகா, ரணில், மைத்திரி ஆண்ட காலத்திலும் கடன் பெற்றுத்தான் இயங்குகிறது. 

எங்கே எந்த பணத்தில் எடுப்பது?

நாடுகளுக்கு இலங்கையில் இடம் கொடுக்கும்போது கொமிசன் வாங்கியிருந்தால்,  அது  பல நாட்டு தலைவர்கள் செய்யும் எழுதப்படாத சட்டம். அது இலங்கைக்கு அருகே இருக்கும் வல்லரசு நாடுகளும் செய்கின்றன. 

நாட்டின் பொருளாதாரம் இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டதற்கு ராஜபக்சே குடும்பம் மட்டும் பொறுப்பாளிகள் அல்ல. மாறாக போருக்கு பட்ட கடன், போரின் முன்னர் பட்ட கடனுக்கு கட்டவேண்டிய வட்டியும்,  ஜே ஆர், சந்திரிகா,  ரணில், மைத்திரி ஆண்ட காலத்திலும் கடன் பெற்றுத்தான் இயங்குகிறது. 

அத்தோடு கோட்டாபாஜ ஆட்சியின் ஆரம்பத்திலேயே உலகின் பொருளாதாரத்தை குலைத்த கொரோனா, அடுத்து உலகை குட்டிச்சுவராக்கும் ரஸ்யா உக்ரைன் போர் இவையெல்லாமேதான் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். 

ஊழல் என்பது உலகில் சிறிய நாடுகளிலும் பெரிய நாடுகளிலும் உள்ளது. அதை ஊக்குவித்து தமது நாட்டுக்குள் கள்ளப் பணத்தை அனுமதிக்கும் அமெரிக்கா, சுவிஸ், துபாய் போன்ற நாடுகள் தமது அந்நிய நாட்டு நிதி கையாளல் திட்டத்தை மாற்ற வேண்டும். ஆனால் அது நடக்காத விடயம். 

எனவே இலங்கையின் பொருளாதாரம் சரியாக, உலக சூழலும் உள்நாட்டு சூழலும் இணையவேண்டும். வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது. 

இலங்கையில் நடு நிலையாக இயங்கும் ஒரு நிதி துறை வல்லுநர் லங்கா4 ஊடகத்துக்கு கொடுத்த பிரத்தியேக தகவல் இத.