பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதிருக்க காவல்துறையினருக்கு விசேட உத்தரவு!

#SriLanka #Police #Lanka4
Reha
2 years ago
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதிருக்க காவல்துறையினருக்கு விசேட உத்தரவு!

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால், பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக நோயாளர் காவு வண்டிகள், பாடசாலை வாகனங்கள், அலுவலக போக்குவரத்து சேவைகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை மேற்கொள்ளும் வாகனங்களை எவ்வித இடையூறும் இன்றி பயணிக்க அனுமதிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.