இரவு சாப்பாட்டிற்கு சுவையான நம் நாட்டு எக் பரோட்டா செய்வது எப்படி?
#Cooking
#dinner
#meal
Mugunthan Mugunthan
2 years ago
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு 500 கிராம்
- தயிர் 3 தேக்கரண்டி
- பேக்கிங் பவுடர் அரை தேக்கரண்டி
- வெண்ணெய் 3 தேக்கரண்டி
- முட்டை 2
- உப்பு தேவையான அளவு
- கொத்துக்கறி மஸாலாவிற்கு தேவையான பொருட்கள்
- கொத்துக் கறி 500 கிராம்
- பெரிய வெங்காயம் 2
- பூண்டு 4 பல்
- மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
- பச்சை மிளகாய் 2
- மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
- சீரகத் தூள் 1 தேக்கரண்டி
- உப்பு தேவையான அளவு
- நல்லெண்ணெய் 4 மேஜைக் கரண்டி
செய்முறை:
- கொத்துக் கறியுடன் மஞ்சள் தூள், சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, கொத்துக் கறியைப் போட்டு கிளறவும்.
- மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு போட்டுக் கிளறி நன்றாக வதக்கி, கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
பரோட்டா செய்முறை:
- மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், வெண்ணெய், தயிர் இவற்றைப் போட்டுக் கலந்து, பிசைந்து இருபது நிமிடங்கள் ஊற விடவும்.
- முட்டையுடன் சிறிது உப்புத் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும். மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டை யாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, மிக மெல்லியதாக விரிக்கவும்.
- தோசைக் கல்லை காய வைத்து, விரித்த மாவைப் போட்டு, முட்டையை கரண்டியில் எடுத்து பரவலாக தடவவும்.
- கொத்துக்கறி மஸாலாவை இதன் மீது பரப்பவும். மாவை, இடது பக்கமும், வலது பக்கமும் மடக்கி மூடவும். கவனமாக திருப்பிப் போட்டு, பொன்நிற மானதும் எடுத்துப் பரிமாறவும்.