நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தயார்?

Nila
2 years ago
நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தயார்?

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால், அதனை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவாக 124 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தீர்மானத்தை நெலும் மாவத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் எழுத்து மூலம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கையொப்பமிட்டவர்களில் அரசாங்க அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் அடங்குவதாக அவர் கூறினார்.

பிரதமருக்கு ஆதரவாக பொதுஜன பெரமுன அல்லாத உறுப்பினர்களும் மனுவில் கையொப்பமிட்டுள்ளதாகவும் நிஷாந்த குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையைக் காட்ட முடியாத ஒரு குழுவிற்கு பிரதமர் பதவி வழங்கப்படும் பட்சத்தில், தற்போதைய பிரதமருக்கு ஆதரவான 124 பேரும் எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.