கராச்சி பல்கலைக்கழக குண்டுவெடிப்பு- 3 சீனர்கள் உயிரிழப்பு

#Pakistan #Attack #Death
Prasu
3 years ago
கராச்சி பல்கலைக்கழக குண்டுவெடிப்பு- 3 சீனர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வேன் இன்று திடீரென வெடித்து சிதறியது. வேனில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 

உள்ளூர் மாணவர்களுக்கு சீன மொழியைக் கற்பிக்கும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே வேனில் குண்டு வெடித்துள்ளது. போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!