ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டக் களத்தில் குதிப்பு! ஸ்தம்பிதமடையவுள்ள முக்கிய துறை
Mayoorikka
3 years ago

நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், நாட்டின் அனைத்து வர்த்தக வலயங்களிலும் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் பணியாளர்கள் இன்று நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.



