இன்றைய வேத வசனம் 29.04.2022: நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 29.04.2022: நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் அதிக நேரம் தனிமையில் செலவிடுவதால், கணவன் மனைவி இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக சமீபத்தில் வந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தன் துணைவி புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிடுவதால், ஆண்கள் மன உளைச்சல்களுக்கு ஆளாதாகவும், இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள்  உருவாகிறதாகவும் மற்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது.

சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதினால் வரும் பிரச்சினைகளினால், அநேக குடும்பங்களில் விவாகரத்து நடைபெறுவதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

housewife ஆக இருக்கும் பெண்கள் தங்களுடைய தனிமையை போக்குவதற்காக சமூக வலைதளங்களுக்கு வருகிறார்கள். ஆனால் அதுவே அவர்களை கடைசியில் அடிமையாக்கி விடுகிறது என்பதுதான் வேதனை தரக்கூடிய விஷயம்.

மனநல மருத்துவர்கள் சொல்வது என்னவென்றால், housewife ஆக இருக்கும் பெண்களும், தனிமையில் இருக்கும் பெண்களும் தான் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டு எங்களிடம் வருவதாக கூறுகின்றனர்.
அந்தக் கொடுமைகள் போதாதென்று, சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டுடனும்,  ஒழுக்கத்துடனும் பயன்படுத்தாமல், காலையில் எழுந்து பல் துலக்குவது முதல் இரவில் படுக்கைக்குச் செல்லும் வரை பயன்படுத்தும் நபரகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதனால், குடும்பத்தினருடனும், அக்கம்பக்கத்தினருடனும், நண்பர்களுடனும் செலவிடப்படும் அன்புக்குரிய நேரங்கள் திருடப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு வளையத்தை மீறுவதினால், பேக் ஐடி யில் நண்பர்களாகி, சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துகிறவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி, தற்கொலை செய்துகொள்ளும் இளம் பெண்கள் இன்று அதிகம்.

சமூக வலைத்தளங்களை எப்படி நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தலாம் என்றால், மருத்துவர்கள் Healthcare என்று Page Open செய்து அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்கிறார்கள்.

தொழில் செய்பவர்கள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை விளம்பரம் செய்வதற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள்.

ஊடகங்களை பார்த்தீர்கள் என்றால், தாங்கள் சேகரித்த செய்திகளை கோடிக்கணக்கான மக்களுக்கு கொண்டு செல்ல சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், நாம் எதற்காக பயன்படுத்துகிறோம் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! friend request கொடுப்பதற்கும், புகைப்படங்களை பகிர்வதற்கும், like, share வாங்குவதற்கும், அரட்டை அடிப்பதற்கும், பொழுதை போக்குவதற்கும் பயன்படுத்துகிறோம் என்பதுதான் வேதனையான விஷயம்.

இரண்டு நாட்கள் உணவின்றி கூட இருந்து விடுவேன் ஆனால் மொபைல் போன் இல்லாமல் இருக்க முடியாது. என்று சொல்லுகிற கிறிஸ்தவர்கள் வஞ்சிக்கப்பட்டுப்போய் விட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

பாம்பினுடைய விஷத்திலிருந்து கூட மருந்து கண்டுபிடித்து மனிதர்களை காப்பாற்றுகிறார்கள். ஆனால், நாட்டின் வளர்ச்சிக்காகவும், நல்ல கருத்துகளை பரிமாறிக் கொள்வதற்காகவும் பயன்படுத்த வேண்டிய சமூக வலைத்தளங்கள், இன்று மனிதர்களுக்கு கன்னியாகவும், மனுஷருடைய உயிரை குடிப்பதாகவும் மாறிப் போனது தான் வேதனையான விஷயம்.

நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய சமூக வலைதளங்கள், அதனுடைய கட்டுப்பாட்டில் நம்மை வைத்திருப்பதுதான் மிகுந்த ஆபத்தான விஷயம்.

அக புத்தகத்தை முகபுத்தகத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு. வேத புத்தகத்தை உங்கள் ஆக புத்தகத்தில் எழுதத் தொடங்கி விட்டாலே சமூக வலைதளங்களை பயன்படுத்தும் விதம் மாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்றே முயற்சி செய்வோமா?

பரிசுத்த வேதாகமம் சொல்கிறது:-
நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். (எபேசியர் 5:16)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!