தேர்தலுக்கு முன் இடைக்கால அரசாங்கத்தை நிறுவுங்கள் : தேர்தல்கள் ஆணைக்குழு

Prathees
2 years ago
தேர்தலுக்கு முன் இடைக்கால அரசாங்கத்தை நிறுவுங்கள் :  தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தலுக்கு முன்னர் இடைக்கால அரசாங்கத்தை நிறுவி தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு 
காணும் நோக்கில், நாட்டிற்கு அன்னியச் செலாவணியைப் பெறுவதற்கான இலக்கு வேலைத்திட்டத்துடன் செயற்திட்ட அமைச்சுக்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கான விசேட அமைச்சுக்கள் நிறுவப்பட வேண்டும்  என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கு சுமார் ஒரு பில்லியன் ரூபா செலவாகும் எனவும், தேர்தலுக்கு முன்னர் இடைக்கால தேர்தல் சட்டத்தில் ஐந்து முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் மேற்கொள்ளும் பெரும் செலவினங்களை கட்டுப்படுத்தவும், தேர்தல் முடிந்த பிறகு குறிப்பிட்ட தேதிக்குள் கணக்கு மற்றும் கணக்குகளை வெளியிடவும்இ அதில் தவறுகள் இருந்தால் சீட்களை ரத்து செய்யவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றார்.

இளைஞர்கள் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஒவ்வொரு தேர்தல் சட்டத்திலும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் தினத்தில் அத்தியாவசிய சேவைகளை செய்ய வேண்டிய வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முந்தைய வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.