சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் இரு மாதங்களில் ஆரம்ப உடன்படிக்கை!

#SriLanka #IMF #Lanka4
Reha
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் இரு மாதங்களில் ஆரம்ப உடன்படிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியாளர் மட்ட அல்லது ஆரம்பகட்ட உடன்படிக்கையை எட்ட முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை வர்த்தக சம்மேளன குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இதற்கமைவான பொருளாதார கட்டமைப்பை நிறுவும் பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக, கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன், ஆரம்பநிலை அதாவது, பணிக்குழாம் மட்டத்திலான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முன்னர், இலங்கை அத்தியாவசியமாக நிறைவேற்ற வேண்டியவை என எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டை பூரணப்படுத்த வேண்டும்.

அதன்பின்னரே, இலங்கையினால் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீள செலுத்தல் செயற்பாடுகளை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.