துப்பாக்கியுடன் பெண் ஒருவர் கைது
Prabha Praneetha
3 years ago

கஹட்டகஸ்திகிலிய, பலுகெடுவெவ பிரதேசத்தில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து T-56 துப்பாக்கி, 03 மகசீன்கள் மற்றும் 184 தோட்டாக்கள் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் தொகையொன்று பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.



