இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணிலிடம் விடுத்துள்ள கோரிக்கை!

Nila
2 years ago
இடைக்கால அரசாங்கம் தொடர்பில்  ஜனாதிபதி ரணிலிடம் விடுத்துள்ள கோரிக்கை!

இடைக்கால அனைத்து கட்சி அரசாங்கம் தொடர்பான வேலைத்திட்டத்துடன் ஏற்படுத்தப்படவுள்ள “தேசிய பேரவையில்” இணைந்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்கும் தேவை மற்றும் அதனடிப்படை நடவடிக்கையாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சித் தலைவர்களை கொண்ட தேசிய பேரவையை நியமிப்பது தொடர்பான முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

அதேவேளை சில வாரங்களுக்கு முன்னர், அரசாங்கத்தின் முக்கிஸ்தர்கள், பிரதமர் பதவியை ஏற்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு மக்கள் கூறினால், நெருக்கடியான சந்தர்ப்பத்தில் கூட அதனை பொறுப்பேற்க தயார் என கூறியுள்ளார்.

இதனிடையே ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றால், மேற்குலக நாடுகள் அவருக்கு உதவ முன்வரலாம் எனவும் கூறப்படுகிறது.

அதேவேளை நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் பிரதமரின் ஊழியர் குழுவின் தலைமை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்சவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் போது இராணுவ வெற்றிக்கு முன்னர் ஒரு அடி பின்நோக்கி நகர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் விதத்தில் ராஜபக்சவினரின் அரசியலை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் தனது பதவியை துறக்க வேண்டும் எனவும் அதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோரியுள்ளதாக பேசப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் புதல்வர் சஷீந்திர ராஜபக்சவையும் ஜனாதிபதி தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.