GoHomeGota பேஸ்புக் பக்கத்தை இயக்கியதற்காக கைதானவர், 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல்
#SriLanka
#Arrest
#Gotabaya Rajapaksa
#Facebook
Prasu
3 years ago

சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார, தம்மை கைது செய்து தடுத்து வைத்ததற்கு
எதிராக இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், 'கோட்டா கோ ஹோம்' என்ற முகநூல் பக்கத்தை இயக்கியதற்காக பண்டார, மோதர குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் திடீரென காணாமல் போனதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதை மோதர குற்றப் பிரிவினர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அனுருத்த பண்டார, தம்மைக் கைது செய்தமையும், தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் தனது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என உச்ச நீதிமன்றத்திடம் தீர்ப்பு வழங்கக் கோரி நேற்று மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதேவேளை சமூக வலைதள ஆர்வலரான இவர் 100 மில்லியன் ரூபா நஷ்ட ஈட்டையும் அவரது மனு மூலம் கோரியுள்ளார்.



