நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி பெரும்பான்மை.. அடுத்த வாரம் காட்டத் தயார்
Mayoorikka
3 years ago

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை எதிர்க்கட்சி காண்பிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் தனது கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதை அனைவரும் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை தாம் வெளியிடவில்லை என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தணிக்க ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனவும் அதன் பின்னர் ஏற்படும் நிலைமைக்கு அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



