மதுபானம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

Prabha Praneetha
3 years ago
மதுபானம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திருத்தியமைக்கப்பட்ட விலைகளை விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மதுபானசாலை உரிமையாளர்களை கலால் திணைக்களம் கோரியுள்ளது.

குறிப்பிட்ட சில நபர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக   திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், வாடிக்கையாளர்கள் செய்த முறைப்பாடுகளை ஆராய்ந்ததன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கபில குமாரசிங்க தெரிவித்தார

உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருவதால் நிறுவனங்கள் முன்னதாகவே விலையை உயர்த்தின.

தற்போதைய சூழ்நிலையில் திருத்தப்பட்ட விலைகளை காட்சிப்படுத்தத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!