மைனா கோ கம போராட்டக்களத்தை இடித்து தரைமட்டமாக்கிய பொலிஸார்

Prathees
2 years ago
மைனா கோ கம போராட்டக்களத்தை இடித்து தரைமட்டமாக்கிய பொலிஸார்

பிரதமரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி,  அலரி மாளிகைக்கு  முன்னால் 'மைனா கோ கம' என்ற பெயரில்  கடந்த 26ம் திகதி  முதல் 4 நாட்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுக்கள் தங்கியிருந்த கொட்டகைகள் இன்று (1) காலை பொலிஸாரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

காலை வேளையில் அந்த இடத்தில் குறைந்தளவான மக்கள் தங்கியிருந்த நிலையிலேயே இடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த போராட்ட இடத்தை அமைப்பதற்கு பல தடைகள் இருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு கலவரத்தை தடுக்கும் வகையில் பொலிசார் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை லொரி மூலம் அகற்றினர்.முன்னதாகஇ போராட்டக்காரர்கள் ஒரு குழு மற்றவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது.

போர்க்களத்தின்  கொட்டகைகள் இன்று காலை பொலிஸாரால் அகற்றப்பட்டன. 

ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது அலரிமாளிகைக்கு முன்பாக கொழும்பு நோக்கிய வீதியின் நடுவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.