ரஷ்யாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

Nila
3 years ago
ரஷ்யாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்யாவுக்கு எதிராகப் புதிய தடைகளை விதிக்கும் வகையில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடைவிதிக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்திருக்கிறது. 

அந்தத் தடைகள் ஆறு முதல் எட்டு மாதங்களில் படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எரிபொருளை வேறு நாடுகளில் இருந்து வாங்குவதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு போதுமான கால அவகாசம் கொடுப்பது திட்டம்.  

ரஷ்யாவின் ஆகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடான ஜெர்மனி, தடைக்கு ஆதரவு தந்த பிறகு ஐரோப்பிய ஒன்றியம் முழுமையான தடையை நடப்புக்குக் கொண்டுவரும்  சாத்தியம் அதிகமாகி இருக்கிறது. 

எண்ணெயைத் தடை செய்தால் பொருளியல் பாதிப்பு வரும் என்று ஜெர்மனி முதலில் தயக்கம் காட்டியது. 

ஆனால் அது இப்போது சம்மதம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லா நாடுகளுமே ரஷ்ய எண்ணெய்த் தடையை ஆதரிக்குமா என்பது தெரியவில்லை. 

ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான ஹங்கேரி (Hungary) அதைக் கடுமையாக எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தாலி, ஆஸ்திரியா ஆகிய நாடுகளும்,  எண்ணெய் விலை ஏறும் என்று அஞ்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!