ஜெர்மனிக்கு பிறகு டென்மார்க் சென்ற பிரதமர் மோடி

#D K Modi
Prasu
4 years ago
 ஜெர்மனிக்கு பிறகு டென்மார்க் சென்ற பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார்.

தலைநகர் பெர்லின் சென்ற பிரதமர் மோடிக்கு ஜெர்மனி வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். 

இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உ றவை வலுப்படுத்துதல், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இதனை தொடர்ந்து ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்நிலையில், ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று டென்மார்க் சென்றடைந்தார். கோபன்ஹேகன் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் மிட்டீ ஃபிரிடிக்சனை உற்சாகமாக வரவேற்றார்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4