அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 05.05.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 05.05.2022

மேஷம்: 
அசுவினி : நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப்பெற்று மகிழ்வீர்கள்.
பரணி : தொழிலில் இருந்த தேக்கம் விலகும்; தன லாபம் அடைவீர்கள்.
கார்த்திகை 1 : தன வரவு அதிகரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2, 3, 4 : வார்த்தைகளில் இருக்கும் தெளிவால் நன்மைகளைக் காண்பீர்கள்.
ரோகிணி : நீங்கள் எதிர்பார்த்த செயலில் தடை உண்டாகி பின்னர் நிவர்த்தியாகும்.
மிருகசீரிடம் 1, 2 : முயற்சியால் ஏற்பட்ட உழைப்பு அதிக லாபத்தை ஏற்படுத்தும்

மிதுனம்: 
மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும் நாள்.
திருவாதிரை : தொழிலை விரிவுபடுத்த புதிய வழிகளைக் கண்டறிவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : உறவினர் ஒருவர் மூலம் எதிர்பாராத நன்மை உண்டாகும்.

கடகம்: 
புனர்பூசம் 4 : குடும்பத்தில் சுபச்செலவு ஏற்படும்.அதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூசம் : திடீர் வரவு உண்டாகும், அதற்கேற்ப செலவும் ஏற்படும்.
ஆயில்யம் : முந்தைய கடின உழைப்பிற்கு ஏற்ற பலனை இன்று காண்பீர்கள்.

சிம்மம்: 
மகம் : எதிர்பாராத வரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பூரம் : கேளிக்கை விஷயங்களில் கவனம் தேவை.நட்பு வட்டம் விரியும்.
உத்திரம் 1 : நண்பர்களின் உதவியால் மகிழ்ச்சி காண்பீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2, 3, 4 : புதிய பொறுப்புகளை ஏற்று செயல்படுவீர்கள்.
அஸ்தம் : வார்த்தைகளின் வழியே சங்கடங்களை சந்திப்பீர்கள்.
சித்திரை 1, 2 : குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகும் என்பதால் நிதானம் தேவை.

துலாம்: 
சித்திரை 3, 4 : புதியவர்களிடம் விழிப்புணர்வுடன் தேவை, சிந்தனை மேலோங்கும்.
சுவாதி : மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். அமைதி தேவை
விசாகம் 1, 2, 3 : பெரியவர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு நன்மை தரும்

விருச்சிகம்: 
விசாகம் 4 : நீங்கள் ஈடுபடும் செயல்களில் தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
அனுஷம் : அலைச்சல் அதிகரிக்கும்.அதற்குரிய பலன் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும்.
கேட்டை : தவறானவழி காட்டும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள்.

தனுசு: 
மூலம் : பணியிடத்தில் எடுத்த புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
பூராடம் : எதிர்பார்த்தவற்றில் லாபம் உண்டாகும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திராடம் 1 : பொது வாழ்வில் எடுத்த காரியம் யாவும் வெற்றியாகும்.

மகரம்: 
உத்திராடம் 2, 3, 4 : உங்களுடைய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம்: நேற்றுவரை நிறைவேறாமல் இருந்த செயல் இன்று நிறைவேறும்.
அவிட்டம் 1, 2 : குடும்ப முன்னேற்றத்திற்காக இன்று நீங்கள் எடுத்த முயற்சி வெற்றியாகும்.

கும்பம்: 
அவிட்டம் 3, 4 : முயற்சிக்கு ஏற்ற லாபம் கிடைப்பதில் தடை, தாமதம் உண்டாகும்.
சதயம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஓரளவிற்கே நன்மை கிடைக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 : கிடைப்பதுபோல் இருந்த தொகை தள்ளிப்போகும்.

மீனம்: 
பூரட்டாதி 4 : உங்களை சங்கடப்படுத்திய பிரச்சனை இன்றோடு விலகும்.
உத்திரட்டாதி : மனதிற்கினிய சம்பவங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரேவதி : உங்கள் முயற்சிகளுக்குண்டான பலனைக் காண்பீர்கள்.