மூன்று மாதங்களில் பொதுமக்கள் பலர் உயிரிழப்பார்கள் : அமரவீர

Prathees
2 years ago
மூன்று மாதங்களில் பொதுமக்கள் பலர் உயிரிழப்பார்கள் : அமரவீர

இன்னும் மூன்று மாதங்களில் பொதுமக்கள் பலர் உயிரிழப்பார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இணைய சேனலுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல எச்சரிக்கைகளை விடுத்ததாகவும் 
பொதுஜன பெரமுன எச்சரிக்கைகளை புறக்கணித்து தனது கட்சியை அவமதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறையினால் எதிர்காலத்தில் பெருமளவிலான மக்கள் இறக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய அமரவீர, சர்வகட்சி கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவதே இதற்கு ஒரே தீர்வு எனவும் வலியுறுத்தினார்.

ராஜபக்ச ஆட்சியானது வெளிப்படையான கொள்முதல் செயல்முறைக்கு வெளியே ஊழல் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதற்கு பல சந்தர்ப்பங்கள் இருப்பதாக  அமரவீர கூறினார்.

அந்தச் சமயங்களில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தால் இன்று அவர் உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.

நாட்டின் உள்நாட்டு நெருக்கடிக்கு தீர்வு காண ஜே.வி.பி மற்றும் சமகி ஜன பலவேகய இணைந்து சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்காவிட்டால், தமது கட்சியும் பொதுஜன பெரமுனவும் அரசாங்கத்துடன் எந்த உடன்பாட்டையும் எட்டியிருக்காது என அவர் வலியுறுத்தியுள்ளார்.