புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்
#SriLanka
#Parliament
Mugunthan Mugunthan
2 years ago
பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய 83 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். இது இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் முன்மொழியப்பட்ட இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் 65 வாக்குகளையும் பெற்றனர்.
விமல் வீரவன்ச உள்ளிட்ட 06 பேர் வாக்களிக்கும் போது சபையில் இருக்கவில்லை.