நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? அவசர தேர்தலா?
Prathees
3 years ago

நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஒரே வழி பாராளுமன்றத்திற்குள் தீர்மானம் நிறைவேற்றுவதுதான்.
பாராளுமன்றத்தில் மூன்று வருடங்கள் சென்ற பின்னரே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்க அனுமதிக்கப்படுவார்.
எனவே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அவசரத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படவுள்ளன.
நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, பொதுத் தேர்தலை எதிர்நோக்குகிறோம் என்று 11 கட்சிகளுடன் நடத்திய சந்திப்பில் அவைத்தலைவர் தினேஷ் குணவர்தனவும் தெரிவித்திருந்தார்.



