ரணிலின் வீட்டுக்கு முன்னால் போராட்டம்
#Ranil wickremesinghe
Prathees
3 years ago

கொழும்பு- 7 ஐந்தாவது அவென்யூவில் உள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மையில் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் நியமனம் தொடர்பான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக கட்சி தலைவர்களை சந்தித்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் பின்னர் ரணில் அதனை மறுத்துள்ளார்.
ரணில் பிரதமராக இருந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ‘டீல்’ போட்டதால்தான் தற்போதைய அரசு சிறப்பாக அமைந்தது என்ற விமர்சனங்கள் இந்த நாட்களில் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



