இலங்கையில் தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு இதோ....

#SriLanka #Central Bank #Dollar
இலங்கையில் தற்போதைய அந்நியச் செலாவணி கையிருப்பு இதோ....

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2022 ஏப்ரல் மாத இறுதியில் 1,827 மில்லியன் டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதில் அந்நியச் செலாவணி கையிருப்பு 1,618 மில்லியன் டாலர்களாக உள்ளது. எவ்வாறாயினும், சீன மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் மாற்று வீத வசதியை உள்ளடக்கிய போதிலும், அதனைப் பயன்படுத்துவதில் நிபந்தனைகள் இருப்பதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன் விளைவாக, இலங்கையின் பயன்படுத்தக்கூடிய அந்நிய செலாவணி கையிருப்பு ஏப்ரல் 2022 இறுதிக்குள் 118 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

நிதியமைச்சர் அலி சப்ரி, மே 4 அன்று பாராளுமன்றத்தில் கையிருப்பு 50 மில்லியன் டாலர்கள் கூட இல்லை என்று கூறினார்.