ஜனாதிபதியின் வாகனம் இரண்டு மில்லியன் டொலர்கள்: வெளிப்படுத்திய அநுர
Prathees
3 years ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய வாகனத்தின் பெறுமதி குறைந்தது 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ. 720 மில்லியன்/ரூ. 72 கோடி) என ஜே.வி.பியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் குறைந்தது ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் பல இருப்பதாகவும் அவர் கூறினார்.
தமது அரசாங்கத்தின் கீழ் இந்த வாகனங்கள் அனைத்தும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு டொலர்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற தேசிய பிக்கு முன்னணியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



