சர்வதேச செஞ்சிலுவை தினம் - மே 08 - 2022

Reha
2 years ago
சர்வதேச செஞ்சிலுவை தினம் - மே 08 - 2022

சர்வதேச செஞ்சிலுவை தினம் ஆண்டுதோறும் மே மாதம் - 08ம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் செங்சிலுவைச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கிய சுவிஸ் நாட்டினை சேர்ந்த ஜீன் கென்றி றொனாட் அவர்களின் பிறந்த தினமாகிய மே மாதம் 8 திகதியினை அடிப்படையாக கொண்டு இவ் தினம் உலகலாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது.

செஞ்சிலுவை சங்கம் என்ற உலகலாவிய அமைப்பு 1863ம் ஆண்டு தோற்றம் பெறுவதற்கு அடிப்படை காரணமாக அமைவது ஜீன் கென்றி றொனாட் அவர்கள் தனது வியாபார நோக்கம்  கருதி சொல்பரினா என்ற தேசத்தில் இரு நாடுகளுக்கிடையில் ஏற்பட்ட போரினால் காயமடைந்து குற்றுயிராக கிடந்த போர்வீரர்களையும் பொது மக்களையும் தனது கண்முன் கண்டபொழுது இதிலிருந்து போர் வீரர்களையும் மக்களையும் உடனடியாக மருத்துவ உதவி அளித்து காப்பாற்ற வேண்டும் என்ற மனித நேய பணியினை முன்னெடுக்கும் வகையில் உருவானதே செஞ்சிலுவை சங்கம் ஆகும்.  

இவரது கோட்பாட்டின் அடிப்படையில் மோதல் வன்முறை அனர்த்தம் என்பவற்றில் இருந்து பாதிப்படைந்த மக்களுக்கு தொண்டர்களை அணிதிரட்டி சேவை செய்யும் மிக உன்னதமான பணியினை இவர் ஆரம்பித்து வைத்தார்.

தொண்டர்களை செஞ்சிலுவை சங்கத்தில் இணைத்து சேவை செய்வதற்காக 1864 ஆண்டு பல்வேறு அமைப்புக்களையும் இராஜதந்திரிகளையும் இணைத்து முதலாவது ஜெனிவா சாசனத்திளை உருவாக்கினார் ஜீன் கென்றி றொனாட். இது பின்னர் சர்வதேசத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக செஞ்சிலுவைச்சங்கம் உதயமானது. 

கென்றி றொனாட் தனது நாடாகிய சுவிஸ்லாந்து நாட்டு தேசிய கொடி சின்னமாகிய சிகப்பு நிற பின்னனியில் வெள்ளை சிலுவையை மாற்றியமைத்து வெள்ளை நிற பின்னனியில் சிகப்பு நிற சின்னத்தை அமைத்து உருவாக்கியதே செஞ்சிலுவை கொடியாகும். இது பிற்காலத்தில் செம்பிறையையும் தனது சின்னமாக ஏற்றுகொண்டது.

மனித நேய அடிப்படையிலான மனிதாபிமானம், பாரபட்சம் இன்மை நடுநிலமை, சுயாதினம்,ஒருமைப்பாடு, தொண்டர்சேவை, சர்வதேசமயம்  என ஏழு கொள்கைகள் தன்னகத்தே கொண்டு செயற்படும் ஒர் மனித நேய அமைப்பாகும்.

செஞ்சிலுவை சங்கம் 03 வகையான பிரிவுகளை தன்னகத்தே கெண்டுள்ளது அவையாவன

  • சர்வதேச செஞ்சிலுவை சங்கம்
  • சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் சம்மேளனம்
  • தேசிய செஞ்சிலுவை சங்கங்கள்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம். சுவிஸ்லாந்து நாட்டினை தலைமையமாக கொண்டு இயங்கும் இவ் அமைப்பு தனது செயற்பாட்டை யுத்தம் ,உள்நாட்டு கலவரங்கள் மற்றும் அனர்த்தம் என்பவற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றது.

அத்துடன் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் போர் நடைபெறும் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் எனபவற்றை வலியுறுத்தும் ஓர் அமைப்பாகும். அத்துடன் காலநிலை மாற்றத்தினால் அடிக்கடி ஏற்படும் அனர்த்தங்களை மையப்படுத்தி சேவை செய்யும் ஓர் அமைப்பாகும்.

சர்வதேச செஞ்சிலுவை சங்களின் சம்மேளனம். உலகில் உள்ள 197 நாடுகளின் அங்கத்துவத்தை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களின் சம்மேளனம் ஆகும. இவ் அமைப்பு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய சங்கம் ஊடாக நிவாரணங்கள் வழங்கல் மற்றும் தேசிய சங்கங்களின் இயலளவு ஆற்றலை விருத்தி செய்தல் என்பவற்றுடன் அனர்தங்களுக்கு பதிலிறுத்தல்  அனர்த்த முன்னாயத்தம் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு போன்றவற்றை ஒன்றிணைத்து செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் ஒர் அமைப்பாகும்.

தேசிய சங்கங்கள் ஓவ்வொரு நாடும் தனக்கென உருவாக்கிய சங்கமே தேசிய சங்கங்களாகும் அவ்வகையில்
இலங்கையில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் 1936 ம் ஆண்டு தோற்றம் பெற்றதாகும் இச் சங்கம் ஏனைய தேசிய சங்கங்கள் போல் அனர்த்தங்களுக்கு பதிலிறுப்பு நடவடிக்கை மேற்கொள்ளல் முதலுதவி மற்றும அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் உணவல்லாத பொருட்கள் வழங்கல் என்பவற்றுடன் நிவாரண பணிகள் மேற்கொள்ளல் போன்ற சேவைகளை நாட்டில் ஆற்றி வருகின்றது.

அவ் வகையில் சர்வதேச செஞ்சிலுவை தினம் 2022 ம் ஆண்டுக்குரிய தொனிப்பொருளாக 'கருணையின் செயல்' ஆகும். இக் கருப்பொருளினை அடிப்படையாக வைத்து இத்தினத்தில் செஞ்சிலுவை சங்க தொண்டர்கள் சிறுவர் இல்லங்கள் முதியோர் இல்லங்கள் போன்ற மையங்களில் செயற்பாடுகள் மேற்கொள்ளல் மற்றும் இரத்ததானம் வழங்கல் வைத்தியசாலைகளில் உள்ள நோயாளர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கல் போன்ற மனிதாபிமான செயற்பாடுகளை மாவட்ட ரீதியாக தொண்டர்கள் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

எதிர் காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு உடனடியாக நம்பிக்கை ஊட்டக்கூடிய செயற்பாடுகளை தொண்டர்களை அணிதிரட்டி மேற்கொள்ளும் ஓர் மனித நேய அமைப்பாக செஞ்சிலுவைச் சங்கம் விளங்குகின்றது என்றால் மிகையாகாது.

த.சேதுபதி
தலைவர்
இலங்கை செஞ்சிலுவை சங்கம்
கிளிநொச்சி கிளை.