அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு சிகிச்சையளிக்க மறுத்தது ஏன்? வைத்தியர் விளக்கம்

Prathees
2 years ago
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு சிகிச்சையளிக்க மறுத்தது ஏன்? வைத்தியர் விளக்கம்

தற்போதைய அமைச்சரவை அமைச்சராக இருக்கும் பிரசன்ன ரணதுங்க, நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா வைத்தியசாலைக்குச் சென்று தனது சுகயீனத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காக  இலக்கத்தின்படி சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.

அமைச்சர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக கேள்விப்பட்டதாக குறித்த மருத்துவர்  தாதியை அழைத்து, 

அரசியல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டேன்  எனக் கூறி,  இடஒதுக்கீட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

போஷாக்கு நிபுணர் டொக்டர் ரணில் ஜயவர்தனவினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தைராய்டு பிரச்சினைக்கு சிகிச்சை பெறவே அமைச்சர் பிரசன்ன அந்த இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கலாநிதி ரணில் ஜயவர்தன, சம்பவம் தொடர்பில் விளக்கமளித்தார்.

தாம் இன்று சிரமப்பட்டு வைத்தியசாலைக்கு வந்ததாகவும், தனது வாகனத்திற்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் நண்பரின் வாகனத்தில் வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

பிரசன்ன ரணதுங்க இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இவரிடமிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன்இ இன்று அவர் மூன்றாவது முறையாக விஜயம் செய்துள்ளார்.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் நாடு சீரழிந்துள்ளதாக டொக்டர் ரணில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

பிரசன்ன ரணதுங்க என்ற நோயாளி பிரசன்னமாகியிருப்பதை அறிந்ததும் அவரை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றுமாறும்  பணத்தை மீளஅளிதடது அவரை அனுப்பியதாகவும் அவர் வெளியேறிவிட்டதாக நினைத்ததாகவும் வைத்தியர் கூறியிருந்தார்.

இந்த மறுப்பு குறித்து சமூக வலைதளங்களில் சாதக, எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.