15 ஆயிரம் கோடி தவறாக பயன்படுத்தியதாக பசில் மீது பாரிய குற்றச்சாட்டு..!

Prathees
2 years ago
15 ஆயிரம் கோடி தவறாக பயன்படுத்தியதாக பசில் மீது பாரிய குற்றச்சாட்டு..!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, திவிநெகும சட்டத்தின் மூலம் சமுர்த்தி இயக்கத்தை தனது சொந்த சொத்தாக பதிவு செய்துள்ளதாகவும், 15 பில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தி சமுர்த்தி இயக்கம் முற்றாக வங்குரோத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சமுர்த்தி தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் பிரதம அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான கீர்த்தி பண்டார மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்களை மீளக் கொண்டுவந்தால், சமுர்த்தி வங்கியை எதிரணியினர் கொள்ளையடிப்பதாக கடந்த பொதுத் தேர்தலில் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் இன்று சமுர்த்தி வங்கியை கொள்ளையடித்துள்ளனர்.

கடந்த கொரோனா காலத்தில் சமுர்த்தி வங்கியில் இருந்து 5000 ரூபாய் எடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் கௌரவத்தைக் காக்கவே இந்தப் பணம் விநியோகிக்கப்பட்டது. ஆனால் தகுதியானவர்களுக்கு கிடைக்கவில்லை.

அவை கோடீஸ்வரர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த பணம் 25 இலட்சம் அப்பாவி மக்களால் சேமிக்கப்பட்டு சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்டது.

அந்த பணம் என்ன ஆனது என்று வாடிக்கையாளர்களுக்கு இன்னும் தெரியவில்லை.

 இந்த பிரதான அரசியலுடன் சமுர்த்தி வங்கியும் முடிவுக்கு வந்துள்ளது.

சமுர்த்தி வங்கியை வங்குரோத்தியம் செய்தவர்கள் இப்போது ஜனாதிபதி நாற்காலியின் கீழ் தவழ்ந்து 'ஐயா, போகாதே ஐயா' என்று கூறி வருகின்றனர். சிம்மாசனம் தீப்பிடித்தால், அது அணைக்கப்படுவதற்குப் பதிலாக எரிகிறது எனத் தெரிவித்தார்.