அலரி மாளிகை பகுதியில் துப்பாக்கிச் சூடு
#SriLanka
#Lanka4
Shana
3 years ago

அலரி மாளிகையை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், தற்போது அங்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அலரி மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலரி மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு மக்கள் பிரவேசிக்க முற்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நீடித்துள்ளது.
இந்நிலையில், அலரி மாளிகை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அலரிமாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் சில தடியடி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.



