அலரிமாளிகை அருகே தொடர்ந்து பதற்றம் - வானை நோக்கி துப்பாக்கிச் சூடு - ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிப்பு

Nila
3 years ago
அலரிமாளிகை அருகே தொடர்ந்து பதற்றம் -  வானை நோக்கி துப்பாக்கிச் சூடு -  ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிப்பு

அலரி  மாளிகை அருகே அமைதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது, அரசாங்க ஆதரவு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடாத்திய நிலையில், இன்று (9) இரவு மீண்டும் பொது மக்கள் அப்பகுதியில் ஒன்று கூடி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அலரிமாளிகைக்குள் நுழைய தொடர்ச்சியாக முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை தொடர்ந்தது.. இந் நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர்.  

அதன் பின்னர் அலரி மாளிகையிலிருந்து வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடாத்தப்பட்டது. 

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையில்,  அலரி மாளிகையின் பாதுகாப்பில் இராணுவத்தின் விஷேட படையணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அலரி  மாளிகையின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ச்சியாக ட்ரோன் கெமராக்கள் மூலம் பாதுகாப்பு தரப்பு ஆர்ப்பாட்டக் காரர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க இன்று இரவு ஆரம்பித்தது.

அத்துடன் அலரி மாளிகையின் பின் பக்க நுழை வாயில் அருகே இன்று இரவு திடீர் தீ ஒன்றினை அவதானிக்க முடிந்தது.  ஆர்ப்பாட்டக் காரர்களால் அந்த தீ வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பட்டும் நிலையில் அதனை அனைக்க பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!