எரிபொருள் விநியோகத்தை குறைத்த சிபெட்கோ: நாடு முழுவதும் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு..

Prathees
2 years ago
எரிபொருள் விநியோகத்தை குறைத்த சிபெட்கோ: நாடு முழுவதும் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு..

பெற்றோல் மற்றும் டீசலின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக நாளாந்த எரிபொருள் விநியோகம் 50 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

எனவே, நாடு முழுவதும் உள்ள சுமார் 50 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது என எண்ணெய் விநியோகத்திற்குப் பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாட்டில் தினசரி நுகர்வுக்காக சுமார் 5000 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகிக்கப்படுகின்ற போதிலும், தற்போது சுமார் 2500 மெற்றிக் தொன் பெற்றோல் மாத்திரமே விநியோகிக்கப்படுகின்றது.

நாட்டில் தினசரி டீசல் நுகர்வு 6000 மெட்ரிக் தொன்னாக உள்ளது. ஆனால் தற்போது தினசரி சுமார் 3000 மெட்ரிக் தொன்கள் மட்டுமே சந்தைக்கு விடப்படுகிறது.

கடந்த மாதம் 28ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்த 37,500 தொன் தாங்கி ஏற்றிச் செல்ல முடியாத காரணத்தினால் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் சுமார் 25,000 மெற்றிக் தொன் உள்ள போதிலும், 95 ஒக்டேன் பெற்றோலில் ஒரு துளிகூட கூட்டுத்தாபனத்திடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.