சுகாதார சேவையை தனியார்மயமாக்கத் திட்டம்?

Prathees
2 years ago
சுகாதார சேவையை தனியார்மயமாக்கத் திட்டம்?

இலவச சுகாதார சேவையை தனியார் மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 30 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், மேற்படி சதியால் அந்த பணத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனல் பிரானந்தோ கூறுகிறார்.

நாட்டில் எரியும் பிரச்சினைகளுக்கு மத்தியில் போதிய சுகாதார வசதிகள் இன்மை, வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்டவை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளின் கடைசி வாரத்தில் தற்போதைய சுகாதாரப் பிரச்சினை குறித்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட பேசாதது துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் சுகாதார அமைப்பு சீர்குலைவதை தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.