இந்தியா இலங்கையில் அமைதி, ஸ்திரத்தன்மை நிலவ ஆதரவு தரவுள்ளது.
#SriLanka
#India
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கையுடன் வரலாற்று உறவுகளைக் கொண்ட அண்டை நாடாக, இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு முழுமையாக ஆதரவளிக்கிறது.
இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கான ஜனநாயக நடைமுறைக்கு இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அண்டை நாடு கொள்கையின் கீழ் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் போக்க இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியா 3.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது.



