இலங்கையில் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படுமா? மின்சார சபையின் புதிய அறிவிப்பு
Nila
3 years ago

பாரியளவில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மின்சார சபையின் பொறியியளாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதன்படி மின் துண்டிப்பு குறித்து தாம் எந்த வித முடிவுகளையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் மின்சாரத்தை துண்டிக்குமாறு கோரினால் மாத்திரமே அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளபபடும் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தடையின்றி மின்சாரத்தை வழங்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



