முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் -அதிகரிக்கும் அழுத்தம்

Nila
2 years ago
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் -அதிகரிக்கும் அழுத்தம்

நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த தூண்டியதற்காக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்றும்  தொழிற்சங்க கூட்டமைப்பு (TUC) கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்களில் சிறைக் கைதிகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி, சிறைச்சாலைகள் ஆணையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்றைய தினம் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் அடையாளப் போராட்டத்தை நடத்தியதுடன், அதனைத் தொடர்ந்து அவர்கள் கோட்டகோகமவிற்கு ஆதரவாக காலி முகத்திடலுக்கு பேரணியாகச் சென்றனர்.

இதன் போது குறித்து தொழிற்சங்க கூட்டமைப்பின் (TUC) இணைப்பேச்சர்ளர் ரவி குமுதேஷ் கோரிக்கை இவ்வாறு கூறியுள்ளார். 

இதேவேளை, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு பயணத் தடை விதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, அமைதியான மற்றும் நியாயமான மக்களின் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, உள்ளிட்டவர்கள் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.