இலங்கை ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என இளம் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

Nila
2 years ago
இலங்கை ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என இளம் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என இளம் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 
அத்துடன், நாடு இத்தகைய நெருக்கடி நிலைமையை சந்திக்கும் என அறிந்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதிருந்த ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 
மேலும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள எத்தகைய பிரேரணைகள் அமுல்படுத்தப்பட்டாலும், ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனும் நிபந்தனைக்கு அமையவே அதனை முன்னெடுக்க வேண்டும் எனவும் இளம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 
மேலும், அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதலுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது அலுவலகமும் உடந்தையாகக் காணப்பட்டதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
 
அத்துடன், அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிப்பதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.