இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு இடமில்லை: பாதுகாப்புச் செயலாளர்

Mayoorikka
3 years ago
இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு இடமில்லை: பாதுகாப்புச் செயலாளர்

தற்போதைய நிலைமையில் நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டுவருவதற்கான எந்நவொரு தீர்மானமும் இல்லையென பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் வன்முறைகள் பாரதூரமானால் அதனை கட்டுப்படுத்தும் அதிகாரம் இராணுவத்தினருக்கு வழங்கப்படுமே தவிர ஒருபோதும் இராணுவ ஆட்சியாக மாறாது என்று தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பிற்காவே இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் எனவே அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சரவை கலைக்கப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்பு கடமைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்காக அரசியலைப்பிற்கமைய மீண்டும் தான் பாதுகாப்பு செயலாளராக நியமனம் பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மேலும் குறிப்பிட்டிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!