அரசுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை மே 17 விவாதிக்க தீர்மானம்
Mayoorikka
3 years ago

எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதிக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை விவாதிக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இணக்கம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
அன்றையதினம் பிரதி சபாநாயகர் தெரிவும் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



