பசிலுக்கும் நடேசனுக்கும் எதிரான மல்வானை வழக்கை தொடர்வது குறித்து இன்று தீர்மானம்

Prathees
2 years ago
பசிலுக்கும் நடேசனுக்கும் எதிரான மல்வானை வழக்கை தொடர்வது குறித்து இன்று தீர்மானம்

தொம்பே, மல்வான, மப்பிட்டிகம பிரதேசங்களில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்து பாரிய வீடு, நீச்சல் தடாகம், பண்ணையை நிர்மாணித்து அரச நிதியை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர்  தாக்கல் செய்த வழக்கு தொடருமா இல்லையா என்பது தொடர்பில் கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (13ம் திகதி) தீர்ப்பு வழங்கவுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி கம்பஹா மேல் நீதிமன்றில் உயர் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​வழக்குத் தொடுப்பினால் அழைக்கப்பட்ட முதலாவது சாட்சி உபுல் குமார ராமவிக்ரம (வீட்டை நிர்மாணித்த ஒப்பந்ததாரர்) 
தாம் முறைப்பாடு செய்யவில்லை எனவும்இ வழங்கப்பட்ட அறிக்கையில் கையொப்பம் இடப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசனுக்கு எதிரான வழக்கில் இனி விசாரணைகள் எதுவும் நடைபெறாது என வழக்குத் தொடரும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அன்றைய தினம் (மார்ச் 25) இவ்வழக்கில் சாட்சியமளிக்க உயர்நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையின் பேரில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 சாட்சிகள் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

மேலும் விசாரணைகளை நடத்தப்போவதில்லை என அரசு தரப்பு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, ஏழு சாட்சிகளும் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

மேலதிக சாட்சியங்கள் இன்றி அரச தரப்பு வழக்கை முடித்து வைத்துள்ளதால், சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, தமது கட்சிக்காரர்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரினார்.

அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர, பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசனுக்கு எதிரான சட்டமா அதிபர் வழக்கு தொடருமா என்பதை மே 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.