நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ளது, அவசியமான தருணத்தில் அதனை நிரூபிக்கத் தயார் - ரணில் விக்ரமசிங்க

#SriLanka #Ranil wickremesinghe #PrimeMinister
Reha
3 years ago
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ளது, அவசியமான தருணத்தில் அதனை நிரூபிக்கத் தயார் - ரணில் விக்ரமசிங்க

நாடாளுமன்றில் தமக்கு பெரும்பான்மை பலம் உள்ளதாகவும் அவசியமான தருணத்தில் அதனை நிரூபிக்கத் தயார் என்றும் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமராக நேற்று பதவியேற்றதன் பின்னர் கொள்ளுப்பிட்டி - வாலுகாராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், காலிமுகத்திடல் போராட்டத்திற்கு காவல்துறையால் இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது உறுதியளித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

அடுத்துவரும் மாதங்களில் இதைவிட நிலைமை மோசமாகும்.

இதிலிருந்து மீள வேண்டும்.

இதனை எம்மால் தனித்து செயற்படுத்த இயலாது.

ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றின் உதவி அவசியமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!