இன்றைய வேத வசனம் 14.05.2022: உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
வேலை களைப்பின் மத்தியில் வெளியே நண்பர்களோடு சென்று காபி, டீ குடித்தால் மனதிற்கு புத்துணர்வாக இருப்பது உண்மையானாலும், அந்த காசை வைத்து பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்கலாம் என்று துடிக்கும் மனமே தகப்பனின் தியாகம்.
காலையில் மிகவும் அசதியாய் இருக்கு ஆனால் மகனை/ மகளை அந்த பயிற்சி வகுப்பிற்கு அதி காலையிலேயே கொண்டு போய் விடவேண்டும் என்று தன் தூக்கத்தைப் பொருட்படுத்தாமல் பிள்ளைகளின் எதிர்கால நலனை கருதுவதே தகப்பனின் தியாகம்.
தனக்கு புது துணி வாங்க காசில்லை, தன்னுடைய ஓடாத அந்த பழைய கை கடிகாரத்தை கூட சரி செய்துகொள்ளாமல், தன் பிள்ளைக்கு ஃபீஸ் கட்ட வேண்டும், புது யூனிபார்ம் வாங்க வேண்டும் என்று அவர்களுக்கு அதிக நேரம் ( Extra time ) வேலை பார்ப்பதே தகப்பனின் தியாகம்.
வீட்டுக் கஷ்டம் பிள்ளைகளுக்கு தெரிந்தால் அவர்கள் மனது கஷ்டப்படுமே என்று மற்றவர்களின் சந்தோஷத் திற்காக வீட்டின் கஷ்டங்களை தனக்குள்ளேயே பூட்டி வைப்பதே தகப்பனின் தியாகம்.
வேலை ஸ்தலத்தில் மேனேஜரிடம் அவமானங்களை சகிப்பதிலிருந்து Customerகளிடம் திட்டு வாங்குவதிலிருந்து, எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பல சவால்களை சந்திப்பதே தகப்பனின் தியாகம்.
AC அறையில் பெரிய MNCயில் வேலை செய்யும் தகப்பன்மார் முதல் வெயிலில், மழையில், கூலி வேலை செய்யும் தகப்பன்மார் வரை enjoy பண்ணி சந்தோஷமாக அந்த வேலையை செய்வதில்லை. என் பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்வது தகப்பனின் தியாகம்.
ஒரு சிலர் இப்படி யோசிக்கலாம் . . . ம்ம் . . . எங்க அப்பா இப்படி இல்லை. அவர் ரொம்ப குடிப்பாரு; வீட்டில் பிரச்சனை செய்கிறார்; இவரை எப்படி தியாகி என்று சொல்வது?
நாம் எல்லோருக்கும் சிறந்த தகப்பன் பரலோகத்தில் இருக்கிறார் அவர்களிடம் இந்த அப்பா மாற வேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள். அப்படி ஜெபித்து நிறைய பிள்ளைகளின் அப்பாக்கள் மாறியிருக்கிறதை நாங்கள் பார்த்திருக்கிறோம். எனவே, இயேசப்பாவிடம் ஜெபியுங்கள்; அது வல்லமையானது.
வேறு சிலர், அப்பாவை இழந்து, இந்த அவர்களை miss பண்ணுகிறீர்கள். ஆனால் உங்களை அவருடைய தோளில் தூக்கி சுமந்து ஆலோசனைக் கொடுத்து அரவணைக்க ஏசாயா 46:4, உபா 1:31 பரலோக தகப்பன் இருக்கிறார். உங்களுடைய வாழ்க் கையில் அப்பாவை இழந்ததால் அந்த வெறுமையை அவருடைய அன்பு நிரப்பிவிடும்.
இதை வாசிக்கும் வாலிபர்களே! இதுவரைக்கும் அப்பாவிற்கு எதுவும் செய்ததில்லை, அவரை பாராட்டினதில்லை, அவரோடு நேரம் செலவிடவில்லை இல்லையா? யோசிங்க!
அப்பாவை Surprise பண்ணுங்க! உங்களுடைய அன்பை வெளிப்படுத்திக் காண்பிங்க! ரொம்ப நாட்களாக அப்பா சொல்லி கீழ்ப்படியாமல் இருந்த காரியத்திற்கு கீழ்ப்படியுங்கள். அப்பாவின் சுகத்திற்காக நீண்ட ஆயுசிற்காக ஜெபம் செய்யுங்கள்! ஆமென்!
யாத்திராகமம் 20:12
உன் தேவனாகிய கர்த்தர்உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.