பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிரான்ஸில் அடுத்த மாதம் முதல் புதிய கார்களுக்கு கறுப்பு பெட்டி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் ஏற்கனவே இருக்கும் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறை மூலம் வாகனங்களின் விலைகளில் அதிரிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கறுப்புப் பெட்டிகள் காரின் வேகம், பிரேக், ஸ்டீயரிங், எயார்பேக் வரிசைப்படுத்தல் மற்றும் சீட் பெல்ட் பயன்பாடு போன்ற விவரங்களைக் கண்டறிய முடியும்.
அவ்வாறு காரின் கறுப்புப் பெட்டியினால் சேகரிக்கப்பட்ட தகவல் காரின் செயல்திறனின் இயந்திர அம்சங்களைப் பற்றியதாக மாத்திரமே இருக்கும் எனவும் வேறு தகவல்கள் சேகரிக்கப்படாதெனவும் குறிப்பிடப்படுகின்றது.
கண்டறியப்பட்ட தரவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் நீக்கப்படும், ஆனால் கார் சம்பந்தப்பட்ட எந்த வீதி விபத்துக்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராயும் போது கறுப்பு பெட்டியில் இருந்து தகவல் பெற முடியும்.
விபத்து, வெள்ளம், தீ போன்றவற்றைத் தாங்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிய கார்களில் கட்டாயமாக இந்த கறுப்புப் பெட்டி பொருத்தப்பட்டிருக்கும் என கார் தயாரிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பயன்பாட்டில் உள்ள கார்களுக்கு இந்த கருப்புப் பெட்டிகளை பொருத்திக் கொள்வதற்கு ஒரு காருக்கு குறைந்தது 100- 150 யூரோ வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைவில் விரைவில் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



