இன்றைய வேத வசனம் 15.05.2022: உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம்  15.05.2022: உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்

தனக்கு முன் இருந்த மரக்கட்டைகளை மிகவும் கஷ்டத்தோடு அறுத்துக் கொண்டிருந்தார் ஒரு விசுவாசி. மரக்கட்டைகள் ஏராளமாயிருந்ததினாலும், அறுக்கும் வேகம் குறைவாயிருந்தபடியினாலும், மிகவும் வேதனையோடு, உடல் வலிமையை அதிகமாக செலுத்தி தவித்துக் கொண்டிருந்தார்.

இன்னொரு விசுவாசி அங்கு வந்து, "ஐயா, நீங்கள் ஏன் இவ்வளவு அவதிப்படுகிறீர்கள். முதலில் உங்கள் வாளின் பற்களைக் கூர்மைப்படுத்தி விட்டு, பின்பு அறுத்தால் எளிதாக வேகமாக அறுக்கலாமே?" என்றார்.

அதற்கு அந்த விசுவாசி "வாளைத் தீட்டுவதற்கு நேரமில்லையே, காலையிலிருந்து தொடர்ந்து அறுத்துக் கொண்டிருக்கிறேனே, தெரியவில்லையா?" என்றாராம்.

அநேகர் இப்படித்தான், கர்த்தருடைய பாதத்தில் ஜெபத்தில் அமர்ந்து முதலில் தங்களை பெலப்படுத்திக் கொள்ளாமல், ஊழியம் என்றும், உழைப்பு என்றும், ஓடி எல்லாவற்றிலும் நஷ்டமடைகிறார்கள். மழுங்கிய வாள் வேகமாக அறுக்காது. உங்கள் சுயமுயற்சியால் தேவ ஆசீர்வாதத்தைப் பெறமுடியாது.

ஜெபத்தைப் புறக்கணித்துவிட்டு, எந்த வேலையையும் தொடங்காதேயுங்கள் கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, உங்கள் குறைவுகளை அறிக்கையிட்டு, பரிசுத்தாவியின் வல்லமையோடு, ஊழியத்திற்கோ, வேலைக்கோ செல்லுங்கள். அப்பொழுது எல்லாம் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் நடக்கும். கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்தருளுவார்.

உங்கள் வேலையை நீங்கள் செய்ய ஆரம்பிக்குமுன், உன்னத பெலன் உங்களோடு இணைத்திருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

"உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்" (நீதிமொழிகள் 3:6)

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!