ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பிரதமருக்கு இடையில் இன்று சந்திப்பு!

Reha
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பிரதமருக்கு இடையில் இன்று சந்திப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஆளும் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பிரதமர் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது தரப்பு ஆதரவு வழங்கவுள்ளதாக ஆளும் கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற குழு அறிவித்துள்ளது.

இந்த இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த சந்திப்புகள் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நேற்று அறிவித்த நிலையில், அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் இன்றைய மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.