நாளை முதல் கடவுச்சீட்டுகள் வழமைக்கு திரும்பும்

Prabha Praneetha
2 years ago
நாளை முதல் கடவுச்சீட்டுகள் வழமைக்கு திரும்பும்

நாளைய தினம் வழமையான செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ள போதிலும், விண்ணப்பதாரர்கள் சேவைகளைப் பெறுவதற்கு முன்னர் சந்திப்பை முன்பதிவு செய்ய வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் விரும்பும் சேவைக்கு முன்பதிவு செய்ய, திணைக்களத்தின் இணையத்தளமான http://www.immigration.gov.lk/ அல்லது ஹாட்லைன்: 070 7101060 ஊடாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திணைக்களத்தின் தினசரி திறன் சுமார் 2,000 பாஸ்போர்ட்டுகளை வழங்குவதால், நெரிசல் மற்றும் தேவையற்ற தாமதங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மே 4 அன்று குடிவரவுத் திணைக்களம் சிஸ்டம் கோளாறால் முடங்கியதால் இரண்டே நாட்களில் பல ஆயிரம் கடவுச்சீட்டுகள் பேக்லாக் செய்யப்பட்டன, இது ஒரு சில   நாட்களில் இயல்பு நிலைக்குத்  திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால்  தோற்றுப்போனது .

திணைக்களத்தின் (ஹெவி டியூட்டி கம்ப்யூட்டர் சர்வர்கள்)  செயலிழந்து, புதிய டேட்டாவை ஸ்கேன் செய்வதில் ஏற்பட்ட சிக்கல்களின் விளைவாக,   கடவுசீட்டுகளை அச்சடிக்கும் அமைப்பில் சிக்கலை எதிர்கொண்டது.