அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளை கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம் - பிரதமர்

Nila
2 years ago
அத்தியாவசியமற்ற அரச பணியாளர்கள் நாளை கடமைக்கு சமுகமளிக்க வேண்டாம் - பிரதமர்

அன்றாடம் அத்தியாவசிய உணவு பொருட்களுக்காக செலவு செய்வதற்கு திறைசேரியில் நிதி இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பிரதமர் தெரிவித்தார்.

அன்றாட நுகர்வுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குரிய செலவினங்களுக்காக உடனடியாக நிதியைக் தேட வேண்டியுள்ளது. இந்த விடயம் இலங்கையை மாத்திரம் பாதிக்கும் பிரச்சினையல்ல.

உணவு நெருக்கடி உலகளாவிய நெருக்கடியாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், அதனை முன்னதாகவே அறிந்து, அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உலக வங்கி 30 பில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய பிரதமர், அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை (20) கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

தற்போதைய கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.