நாட்டில் மண்ணெண்ணெய் துஷ்பிரயோகம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது - காஞ்சன விஜேசேகர

Reha
2 years ago
நாட்டில் மண்ணெண்ணெய் துஷ்பிரயோகம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது - காஞ்சன விஜேசேகர

நாட்டில் மண்ணெண்ணெய் துஷ்பிரயோகம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்..

எனவே குறைந்த வருமானம் பெறும் மக்களின் அன்றாட தேவைகளுக்கு போதிய மண்ணெண்ணெய் வழங்குமாறு பிரதேச செயலாளர் மற்றும் கடற்றொழில் பரிசோதகர் ஆகியோரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக கடற்றொழில் துறை மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் பெருந்தோட்ட சமூகத்தினரின் தேவைகளுக்காக மண்ணெண்ணெய் மானியங்கள் வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மண்ணெண்ணெய் பதிவு செய்யப்பட்ட நிரப்பு நிலையங்களுக்கு தொடர்ந்து மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்றும், இதுபோன்ற மண்ணெண்ணெய் அதிக அளவில் பேருந்துகள், லாரிகள் மற்றும் பிற தொழிற்சாலைகளால் தவறாகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாவுக்கு சலுகை விலையில் வழங்கப்பட்ட போதிலும், லீற்றர் ஒன்றின் விலை 350 ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.