இன்றைய வேத வசனம் 21.05.2022: சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 21.05.2022: சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்

நான் கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும்போது பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடையே கேள்வி ஒன்றை கேட்டார்.

அதாவது, "கடவுளுடைய படைப்புகளில் எது தவறானது என்று நினைக்கிறீர்கள்?" என்பதாக மாணவர்களிடம் கேட்டார்.

அதில் ஒரு மாணவர் எழுந்து ஏழை பணக்காரர் என்று கடவுள் படைத்திருப்பது தவறு என்று சொன்னார்.
மற்றொரு மாணவன் எழுந்து சாதி, மத பேதங்களை படைத்திருப்பது தவறு என்றார்.
ஒரு மாணவி எழுந்து மனிதர்களை கருப்பாகவும், வெள்ளையாகவும் என்று இருவிதமாக படைத்திருப்பது தவறு என்றார்.

மற்றொரு மாணவி எழுந்து நான் என் குடும்பத்தில் பிறந்தது தவறு என்று  சொன்னார்.
சற்றும் தாமதியாமல் பேராசிரியர், ஏன் இவ்வாறு கூறுகிறாய்? என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த மாணவி, நான் என்னுடைய தோழி மூலமாக இயேசு கிறிஸ்துவை என் சொந்தமாக ஏற்றுக்கொண்டேன். ஆனால், என் குடும்பத்தார் அதை ஏற்றுக்கொள்ளவில்லை சபைக்கு செல்ல என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள்.

நான் என் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல், ஞாயிற்றுக்கிழமைகளில் என் வீட்டிலிருந்து  14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிறிஸ்தவ சபைக்கு சைக்கிளில் சென்று வந்து கொண்டிருக்கிறேன்.
என் குடும்பத்தாரை போல கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகருக்கு தான் என்னை திருமணம் செய்து வைக்க போவதாக சொல்கிறார்கள். எனவே, என் குடும்பத்தில் என்னை பிறக்க செய்தது தவறு என்று அந்த மாணவி சொன்னார்.

கிறிஸ்துவை அறியாத அந்தப் பேராசிரியரும் சிரித்துக்கொண்டே அந்த மாணவியை  சரி உட்காரு என்றார்கள்.

அந்த சகோதரி வாஞ்சை என்னை மிகவும் தொட்டது.
நம்முடைய, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைப் பொருத்தவரை குறைந்தது மூன்று, நான்கு கிலோ மீட்டர்க்கு ஒரு சபை அல்லது ஜெப கூடாரம் இருக்கிறது.

ஆனால், சபை கூடுகையில் நாம் பங்கு பெறுகிறோமா? அல்லது அசட்டை பண்ணகிறோமா? அல்லது காலதாமதமாக செல்கிறோமா?
நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்ப்போம்!!!

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். (எபிரேயர் 10-25)

ஜெபம்:
அன்பான பரலோக பிதாவே, உம்முடைய பரிசுத்த இரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்ட சபையில் என்னையும் ஒரு அங்கத்தினராக சேர்த்து கொண்டதிற்கு நன்றி. அன்பின் தேவனே, எங்களது வாழ்வில் சபை கூடிவருதலுக்கு முதல் முக்கியத்துவத்தைக் கொடுப்பவர்களாகவும் எக்காரணத்தினாலும் அதனை விட்டுவிடாதிருக்கவும் கிருபை தாரும். 
நாங்கள் சபையில் நடக்கும் எந்த காரியத்தையும் தவற விடாமல் கலந்துக்கொள்ளவும் எங்களுக்கு கிருபை செய்யும், இயேசுவின் நாமத்தில், ஆமென்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!