கால்நடை மருத்துவருக்கு பதிலாக கணவர் சிகிச்சை அளித்து வந்த நாய் மரணம்: உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு

Prathees
2 years ago
கால்நடை மருத்துவருக்கு பதிலாக கணவர் சிகிச்சை அளித்து வந்த நாய்  மரணம்: உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு

வெயாங்கொடை, பட்டலகெதர பிரதேசத்தில் உள்ள கால்நடை மருத்துவ மனையில் கால்நடை வைத்தியருக்கு பதிலாக அவரது கணவர் நாய்க்கு வைத்தியம் செய்ததால் நாய் உயிரிழந்துள்ளதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வைத்திய நிலையத்தின் கால்நடை வைத்தியர் பிரசவம் முடிந்து தற்போது வீட்டில் உள்ள நிலையில் கால்நடை வைத்தியரின் கணவர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றார்.

கால்நடை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த தனது நாய் உயிரிழந்துள்ளதாக வெயாங்கொடை பிரதேசவாசி ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வளர்ப்பு நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த நாய்க்கு, சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவ மனையில் நான்கு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், கடந்த 13ஆம் திகதி நாய் இறந்ததையடுத்து, குறித்த வைத்திய நிலையத்தில் கால்நடை வைத்தியருக்கு பதிலாக அவரது கணவர்  இவ்வாறு சிகிச்சையளித்துள்ளமை நாயின் உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது.

இறந்த நாய் சுமார் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்தது என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

வெயங்கொடை பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.