இலங்கையில் எதிர்வரும் முதலாம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

Nila
2 years ago
 இலங்கையில்  எதிர்வரும் முதலாம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு வசதியாக நாளை முதல் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை மற்றும் 29ஆம் திகதி ஆகிய தினங்களில் மின்துண்டிப்பு மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையில் குறித்த இரண்டு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் மாலை 6.30க்கு பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் பரீட்சை இடம்பெறாத வேளையில் மதியம் 12 மணி முதல் மாலை 6.30 வரையிலான காலப்பகுதிக்குள் கைத்தொழில் வலயம் மற்றும் கொழும்பு வர்த்தக நகர வலயம் தவிர்ந்த ஏனைய அனைத்து வலயங்களிலும் 1 மணித்தியாலம் 45 நிமிடங்கள் முதல் 2 மணித்தியாலம் 15 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

கைத்தொழில் வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், கொழும்பு வர்த்தக நகர வலயத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.