உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? - அமெரிக்கா மறுப்பு

Prasu
2 years ago
உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? - அமெரிக்கா மறுப்பு

 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று போர்ச்சுக்குல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா இன்று உக்ரைன் வந்தடைந்தார். தலைநகர் கீவ் வந்தடைந்ததும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். ஒற்றுமையின் அடையாளமாக உக்ரைனுக்கு வந்திருப்பதாகவும், காட்டுமிராண்டித்தனமான ரஷிய படையெடுப்பை கண்டிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

உக்ரைனின் ஜிடோமிர் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஏராளமான ஆயுதங்களை அழித்துவிட்டதாக ரஷிய ராணுவம் கூறி உள்ளது. கப்பலில் இருந்து  ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் உலக செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவை வெளிநாட்டு ஏஜெண்டுகள் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது. அரசை விமர்சிக்கும் கேரி காஸ்பரோவ் மற்றும் எண்ணெய் நிறுவன முன்னாள் அதிபர் மிகைல் ஆகியோரை, வெளிநாட்டு ஏஜெண்டுகளாக செயல்படும் தனிநபர்களின் பட்டியலில் சேர்த்துள்ளதாக ரஷிய நீதித்துறை அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.